கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 2162 பேர் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு தற்காலிகமாக தற்போது தமிழகம் திரும்பியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், லாரி, ஆட்டோ, தனியார் பேருந்து உள்ளிட்டு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.



மேலும், தமிழகத்தில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல், ரயிவே நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில், திமுக, கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கைதாகினர்.

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகள் உட்பட 1283 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். அதில் 35 பெண்கள். மற்றும்  கோவை மாநகர அளவில் 17 இடங்களில் பேராட்டங்களில் ஈடுபட்ட 27 பெண்கள் உட்பட 879 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...