கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணி: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, ஆகஸ்ட் 18 முதல் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது. வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கோவை: கோவை மாநகரில், அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதி இரயில்வே மேம்பாலம் அருகில் நாளை (18.08.2024) முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில்ஸ் SNR சந்திப்பு, PSG College வழியாக அவினாசி மார்க்கம் செல்லும் வாகனங்கள் Poineer Mill ரோடு, அவினாசி ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, காந்திமாநகர் மேம்பாலம், காந்திமாநகர் சந்திப்பு, தண்ணீர் பந்தல் ரோடு S Bend சென்று வலதுபுறம் திரும்பி Tidel Park ரோடு மற்றும் கொடிசியா ரோடு வழியாக அவினாசி சாலையை அடையலாம்.

R.S.புரம், தடாகம் ரோடு, 100 அடி சாலை, சிவானந்தா காலனி பகுதிகளில் இருந்து அவினாசி சாலை வழியாக விமான நிலையம், திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் சத்தி ரோடு, கணபதி, விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு வழியாக அவினாசி ரோடு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உக்கடம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள் சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் வழியாக L&T Bypass சென்று குறிப்பிட்ட இடங்களுக்கு எளிதாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டுநர்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மாற்று ஏற்பாடுகள் மூலம் கட்டுமானப் பணி காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...