கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வரி செலுத்தாத 1047 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டல பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினாலும் மற்றும் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளையும் கண்டறிந்து கடந்த 26.10.2016 முதல் 25.04.2017 வரை தெற்கு மண்டலத்தில் 385 குடிநீர் இணைப்புகளும், கிழக்கு மண்டலத்தில் 137 குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ன.

மேலும் இதேப்போன்று, வடக்கு மண்டலத்தில் 148 குடிநீர் இணைப்புகளும், மேற்கு மண்டலத்தில் 68 குடிநீர் இணைப்புகளும் மற்றும் மத்தியம் மண்டலத்தில் 309 குடிநீர் இணைப்புகளும் என மொத்தம் 1047 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சொத்து வரி மற்றும் இதர வரிகள் செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே, வரி செலுத்தாத நிலுவைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாநகராட்சி வணிக வளாகத்தில் இருக்கும் வாடகைதாரர்கள் வாடகை நிலுவைத்தொகையை செலுத்துமாறும் மற்றும் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...