கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு குறித்து பாராட்டு

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு குறித்து முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கலைஞரின் சாதனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்எம்பி. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநாயகி, கழக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அவரது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து சிறப்பாக செயல்பட்டதை நினைவு கூர்ந்தனர்.

கலைஞரின் முக்கிய சாதனைகளான கைரிக்சா ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள், கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் போன்றவற்றை பாராட்டி பேசினர்.



கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் M.K. Stalin அவர்களின் முயற்சியால் ஒன்றிய அரசு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்காக முதலமைச்சருக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...