ஆழியார் கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம்: சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையே இதற்குக் காரணம்.



கோவை: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஆழியார், ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

ஆழியார் பகுதியில் உள்ள கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக மூடப்பட்டிருந்த கவி அருவி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக திறக்கப்பட்டது.



தற்போது நேற்று மாலை மேல் மழையின் காரணமாக அருவியில் திடீர் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கவியருவி மூடப்பட்டது.

அருவிக்கு தண்ணீர் வரத்து சீராகும் வரை தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...