கோவை மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு

கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்கிறது. செம்மொழி பூங்கா, காவலர் குடியிருப்பு, மருத்துவமனை உபகரணங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.



கோவை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக் குழுவினர், கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்கா கட்டும் பணிகளை முதலில் ஆய்வு செய்தனர்.



ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் செம்மொழி பூங்கா திட்டங்கள் குறித்து குழுவுக்கு விளக்கம் அளித்தனர்.





தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறுகையில், "தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுகின்ற மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோரோடு இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். கோவையில் செம்மொழிப் பூங்காவிற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பது குறித்து, குழு நேரடியாக கலாய்வு செய்ய வந்தது. கோவை மாநகராட்சி ஆணையரும் தலைமை பொறியாளரும் இந்த பணிகள் நடைபெறுவது குறித்து வரைபடங்களோடு குழுவுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்." என்றார்.

"125 ஏக்கரில் இந்த பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது சிறைச்சாலை இருக்கின்ற காரணத்தினால், மாவட்ட ஆட்சித் தலைவர் சிறைச்சாலையை மாற்றம் செய்த பிறகு முழுவதுமான 125 ஏக்கர் இந்த பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. தற்போது 45 ஏக்கர் நிலப்பரப்பில் 167 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது." என்றார்.

"2021 ஆம் ஆண்டு செம்மொழிப் பூங்காவிற்கான உறுதிமொழி அளிக்கப்பட்டது.(உறுதிமொழி எண் 173/2021) தமிழக முதலமைச்சர் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகின்ற வகையில் செம்மொழி பூங்காவிற்கான பணி நடைபெற்று வருகிறது என்பதை குழு உறுதி செய்திருக்கிறது. அவ்வப்போது நடைபெறும் பணிகளை துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். தற்போது 45 ஏக்கரில் நடைபெற்று வரும் பூங்காவிற்கான பணிகள் மே 25ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர், தலைமை பொறியாளர் முடிவு செய்துள்ளனர்." என்றார்

அவர் மேலும் கூறுகையில், அடுத்ததாக 54 கோடி ரூபாய் செலவில் காவலர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணியை மாநகராட்சி காவல் ஆணையருடன் பார்வையிட உள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரியில் 2.45 கோடியில் நீராவிய இயந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய உள்ளோம். 250 கோடி ரூபாய் செலவில் மேற்கு புறவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா குழு ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கூடத்தின் மறுசீரமைப்புக்கு 6 கோடியே 80 லட்சம் அரசு கொடுத்துள்ளது அந்த பணிகள் தொடங்கப்பட்டு முறையாக நடைபெற்று வருகிறதா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆய்வு செய்ய உள்ளோம். மருதமலையில் 5.20 கோடி ரூபாய் செலவில் ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா என்பதை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோரோடு கள ஆய்வு செய்ய உள்ளோம்." என்றார்.

"கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுதி மொழிகள் 2002ல் இருந்து நிலுவையில் உள்ளது. ஏன் அது இன்னும் நிலுவையில் உள்ளது? ஏன் அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை? அது குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஆய்வு செய்ய உள்ளோம்." என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...