உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் எலையமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, செந்தில்குமார், உடுமலை தாசில்தார் சுந்தரம் ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் தும்பலபட்டி, கல்லாபுரம், எலையமுத்தூர், குருவப்ப நாயக்கனூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். வருவாய் துறை சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.



அதிகாரிகள் மனுக்களின் தன்மையை ஆய்வு செய்த பின்னர், பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மனு அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி பழனிச்சாமி, காளியம்மாள், பொதுக்குழு உறுப்பினர் பாபு, தாசில்தார்கள் விவேகானந்தன், கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சி பாய், சுப்பிரமணியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் சந்தோஷ்குமார், ஷேக்பரீத், ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...