கோவையில் முதல் டெக்னோஸ்போர்ட் ஸ்டோர் திறப்பு: தென்னிந்தியாவில் 15 புதிய கடைகள் திறக்க திட்டம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் டெக்னோஸ்போர்ட் தனது முதல் கடையை திறந்துள்ளது. இந்த நிதியாண்டில் தென்னிந்தியாவில் 15-16 புதிய கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. உயர்தர விளையாட்டு உடைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.


கோவை: கோவையில் முதல்முறையாக டெக்னோஸ்போர்ட் ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது.



உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன விளையாட்டு ஆடைகள் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான டெக்னோஸ்போர்ட், கோவை ஆர்.எஸ்.புரத்தில் தனது முதல் கடையை திறந்துள்ளது.



இந்த நிதியாண்டில் தென்னிந்தியாவில் 15-16 புதிய கடைகளை திறக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.



கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பிரபலமான இடங்கள், மக்கள் அதிகம் கூடும் தெருக்கள், மால்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் புதிய கடைகள் திறக்கப்படவுள்ளன.



டெக்னோஸ்போர்ட் இணை நிறுவனர் சுனில் ஜூஞ்சன்வாலா கூறுகையில், "விளையாட்டுத் துறையில் வளர்ந்து வரும் கோவை நகரில் எங்களது முதல் கடையை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்கள் வணிக விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான பிராண்டாகவும், சிறந்த அனுபவத்தை வழங்கவும், நீண்டகால அடிப்படையில் நிலைத்திருக்கவும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம்," என்றார்.

கோவையில் திறக்கப்பட்டுள்ள இந்த கடை விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வோர் அனைவருக்கும் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்ற ஆடைகள், தொழில்நுட்ப ரீதியான புதுமையான உடைகள் மற்றும் பொருட்கள் இங்கு கிடைக்கும். மேலும், ஒவ்வொரு தயாரிப்பும் அதன் சிறப்பம்சங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.

டெக்னோஸ்போர்ட் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் சுமித் சந்தாலியா கூறுகையில், "எங்களது தனித்துவமான இந்த கடை விற்பனையை ஊக்குவிப்பதோடு, வளர்ச்சிக்கும் உதவும். இங்கு பொருட்களை வாங்கும் அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு புதுமையாக இருப்பதோடு, எங்கள் பிராண்ட் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கும்," என்றார்.

டெக்னோஸ்போர்ட் தலைமை செயல் அதிகாரி புஷ்பென் மெய்தி கூறுகையில், "வணிக ரீதியாக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில் எங்கள் தயாரிப்புகள் இருக்கும். நீண்டகால அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரருக்கு தேவையான அனைத்து அனுபவங்களையும் வழங்கும். இதன் மூலம் எங்கள் பிராண்டின் வலிமை அதிகரிப்பதோடு, ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையை ஒருங்கிணைக்க முடியும்," என்றார்.

கோவையில் திறக்கப்பட்டுள்ள இந்த கடை ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனைக்கான மையமாகவும் செயல்படும். நடப்பு நிதியாண்டில் மேற்கு மற்றும் வட இந்தியாவில் போட்டியிட இது வலுவான தளமாக அமையும். வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான உறவை வளர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த கடை கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங் பவனுக்கு எதிரே, தரைத்தளத்தில் 25ஏ1 என்ற முகவரியில் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு டெக்னோஸ்போர்ட் இணையதளத்தை பார்வையிடலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...