கோவையில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் 'அரசியல் அறிவு' அமைப்பின் முதல் பயிலரங்கு நடைபெற்றது

கோவையில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் "அரசியல் அறிவு" அமைப்பின் முதல் பயிலரங்கு நடைபெற்றது. "உள்ளாட்சி அரசு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் கலந்து கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் "அரசியல் அறிவு" என்ற அரசியல் பயிற்றுவிப்பு அமைப்பின் முதல் பயிலரங்கு இன்று நடைபெற்றது.



"உள்ளாட்சி அரசு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முன்னோட்ட பயிலரங்கில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி கட்டமைப்பின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து காணொளி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிலரங்கின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்வும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் பேசிய சுரேஷ் சம்பந்தம், "தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க, பல துணைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டி உள்ளது. அதில் ஒரு கட்டமைப்பு என்னவென்றால், அரசியல் தெளிவு மிக்க இளைஞர்களை அரசியல் நோக்கி கொண்டு செல்வது. அத்தகைய இளைஞர்கள் சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சட்டம் இயற்றுவார்கள் என்ற குறிக்கோளோடு இளைஞர்கள் மத்தியில் அரசியல் அறிவைக் கொண்டு சேர்ப்பதே இந்த 'அரசியல் அறிவு' அமைப்பு" என்று கூறினார்.

மேலும் அவர், "இது ஒரு அரசியல் பயிற்றுவிப்பு அமைப்பு. ஒரு சேப்டருக்கு 50 பேர் வீதம் தொகுதிக்கு பத்து சேப்டர்களை உருவாக்க உள்ளோம். இவ்வாறு தொகுதி வாரியாக அரசியல் தெளிவு மிக்க 500 இளைஞர்களை உருவாக்கும்போது அவர்கள் மற்றவர்களிடம் இதைக் கொண்டு சேர்ப்பார்கள்" என்றும் தெரிவித்தார்.

இந்த முன்னோட்ட பயிலரங்கில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசியல் அறிவு அமைப்பின் அடுத்த பயிலரங்கு 'சட்டமன்றம்' என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி சிங்காநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...