கோவை அரசு மருத்துவமனையில் கழிப்பிட வசதி இல்லை என்பது தவறான செய்தி: மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்து, மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து விளக்கமளித்தார். பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது: "கடந்த 14ஆம் தேதி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்கள் கழிப்பிடம், அடிப்படை வசதிகள் கோரிக்கை வைத்தனர். அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் 250 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒரு சில சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை, அவற்றை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையில் விளக்கு இல்லை என்ற குறை முழுமையாக சரிசெய்யப்பட்டது."

"கழிப்பிடம் வசதி இல்லை என்று தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அது உண்மை இல்லை. 5-6 இடங்களில் கழிப்பிடம் தயார் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பாதுகாப்பு உறுதி செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு மருத்துவமனையில் பழைய கட்டிடம் என்பதால் அங்கு ஒரு சில குறைபாடுகள் உள்ளன. உடனடியாக குறைபாடுகளை சரி செய்து வருகிறோம். மருத்துவமனை வளாகத்தில் சாலை, பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பணிகள் நடைபெற்றால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும்."

"பார்கிங் வாகனங்கள் நிறுத்துவதால் மருத்துவமனை வளாகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்கும் விதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவமனையில் நோயாளிகளை பார்வையிட 4 - 6 மணி வரைக்கும் தான் பார்வையாளர்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் உடன் 2 பேர் தான் உள்ளே இருக்க வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரும் தங்குவது தவறு. அதை தவிர்க்க வலியுறுத்தி வருகிறோம். தற்போது இந்த சம்பவத்திற்கு பின் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறை ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது."

"இதுவரை கோவையில் குரங்கம்மை நோய் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. சிகிச்சைக்கு தேவையான வசதிகள் தயார் நிலையில் உள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...