கோவையில் 50 GW காற்றாலை கியர்பாக்ஸ் உற்பத்தி மைல்கல்: ZF விண்டு பவர் சாதனை

கோவையில் உள்ள ZF விண்டு பவர் தொழிலகம் 50 GW காற்றாலை கியர்பாக்ஸ் உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. இது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.


கோவை: ZF விண்டு பவர் நிறுவனம் கோவையில் உள்ள தனது நவீன உற்பத்தி ஆலையில் 50 GW காற்றாலை கியர்பாக்ஸ் உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சாதனை இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ZF நிறுவனத்தின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.



கோவையில் உள்ள ZF விண்டு பவர் தொழிலகம், சீனாவைத் தவிர உலகின் மிகப்பெரிய காற்றாலை கியர்பாக்ஸ் உற்பத்தி ஆலையாக திகழ்கிறது. இது ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாகவும் செயல்படுகிறது. உள்ளூர் திறன்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவின் காற்றாலை மின்சக்தி துறையை மேம்படுத்துவதில் ZF முக்கிய பங்கு வகிக்கிறது.



எதிர்கால வளர்ச்சி தேவைகளை சந்திக்க, கோவை தொழிலகத்தின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 9 GW இல் இருந்து 12 GW ஆக உயர்த்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 13 MW சோதனை ரிக் நிறுவப்பட்டுள்ளது, இது உருவாக்கம் மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்துவதில் ZF நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்துகிறது.



ZF குழுமத்தின் நிர்வாக குழு உறுப்பினர் புரொஃபசர் டாக்டர். பீட்டர் லைய்யர் கூறுகையில், "மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு கியர்பாக்ஸ்களை வழங்குவதன் மூலம் ZF விண்டு பவர் இந்தியாவில் முன்னணி சப்ளையராக திகழ்கிறது. இந்த உற்பத்தி வசதிகளின் விரிவாக்கம் இப்பிராந்தியத்தின் வளர்ச்சி சாத்தியங்களுக்கான ஒரு வலுவான சான்றாகும்" என்றார்.



இந்தியாவில் ZF குழுமத்தின் தலைவர் ஆகாஷ் பாஸ்ஸி, "இந்த மைல்கல்லை வெற்றிகரமாக எட்டிய இந்தியாவின் ஒரே தொழிலகமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்கள் பணியாளர்களின் அர்ப்பணிப்பு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும்" என்று தெரிவித்தார்.

ZF நிறுவனத்தின் 2040-ம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலைமை அடைவது என்ற இலக்கிற்கு ஏற்ப, கோவை தொழிலகம் நவீன தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, பசுமையான எதிர்காலத்திற்கு பங்களிக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...