மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை நீதிமன்ற வளாகத்தில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது, வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். இச்சட்டங்கள் பொதுமக்களுக்கு எதிரானவை என்றும், காவல்துறைக்கு சாதகமானவை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல், இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரயில் மறியல் போராட்டம், மத்திய அரசு அலுவலக முற்றுகை, உண்ணாவிரதப் போராட்டம், டெல்லியில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது," என்றார்.

மேலும் அவர், "அடுத்த மாதம் 30 ஆம் தேதி JAAC பொதுக்குழுவை கூட்டி, இந்திய அளவில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்க வாய்ப்புள்ளது," என்று தெரிவித்தார்.



இந்த மனித சங்கிலி போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது. புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டங்களை நடத்த வழக்கறிஞர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...