மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற உத்தரவு படி தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பிற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதி்ர்ப்பு தெரிவித்தும் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள, பேராசிரியர்கள் ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 150-க்கும் மேட்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...