உடுமலை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பொள்ளாச்சி எம்பி ஆய்வு: பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி ஆய்வு மேற்கொண்டார். பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்துகள் குறித்து புகார் அளித்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேடப்பட்டி நரசிங்கபுரம், பாறைமேடு, மைவாடி, போளரப்பட்டி ஆகிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள குறைகளை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் ஆய்வின் போது 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எம்பியை சந்தித்தனர். இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்வதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.



இதனால் எம்பி முன்னிலையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இப்பகுதியில் தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்படும் என பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நாகராஜன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...