கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கோவையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி கோவையில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினர்.



கோவை: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவையில் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்க கோவைக் கோட்ட மகளிர் துணைக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், பணியிடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வலியுறுத்தியும் இவர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தின் போது, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்திடவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திடவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கைகள் முழங்கப்பட்டன.



இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...