கோவையில் வேளாண் இயந்திரங்கள் குறித்த முகாம்: இ-வாடகை செயலி மூலம் உபகரணங்களை பெறலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரிப்பு குறித்த முகாம் நடைபெற்றது. இ-வாடகை செயலி மூலம் விவசாயிகள் உபகரணங்களை வாடகைக்கு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவருடன் முகாமைப் பார்வையிட்டார்.

இந்த முகாமில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, "விவசாயத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு உபகரணங்கள் குறித்தும் அதற்கான திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உபகரணங்களை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் அதற்கான பராமரிப்பு குறித்தும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.



மேலும் அவர், "இ-வாடகை என்ற செயலி மூலம் விவசாயிகள் உபகரணங்களை வாடகைக்கு பெற்று பயன்பெறலாம். இந்த செயலியை உபயோகிப்பதற்கான பயிற்சியும் இங்கு வழங்கப்படுகிறது. கோயம்புத்தூரில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரமயமாக்களை அதிகபடுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்நிகழ்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.



உணவு பாதுகாப்பு மற்றும் பொது இடங்களில் போட்டிகள் நடத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர் பேசினார். "உணவகங்களில் பாதுகாப்பான உணவு வழங்கப்பட வேண்டும். பொது இடங்களில் போட்டிகள் நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...