பொள்ளாச்சி அருகே குடும்பப் பிரச்சினையால் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாத்தூரில், குடும்பப் பிரச்சினையால் 30 வயது தாய் தனது 7 மற்றும் 4 வயது குழந்தைகளை கிணற்றில் வீசி, பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது.

ஆனைமலை தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.



இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு தனுஸ்ரீ (7) மற்றும் அகிலன் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் மற்றும் சுகன்யா இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக சுகன்யா தனது இரண்டு குழந்தைகளையும் அருகே உள்ள கிணற்றில் வீசி, பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் சுகன்யா ஆகிய மூவரின் உடல்களும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்காக உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், உறவினர்களிடையேயும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...