வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்: பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பேராசிரியர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் என்ற பொதுப் பெயரில் பெண்கள் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு வால்பாறை சென்று விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது, ஆறு மாணவிகள் தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

விசாரணையில், தற்காலிக பேராசிரியர்களான சதீஸ்குமார் (39), முரளி ராஜ் (33), ராஜபாண்டி மற்றும் லேப் டெக்னீசியன் அன்பரசு (37) ஆகியோர் மாணவிகளிடம் முறையற்ற முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இவர்கள் வாட்சப்பில் மாணவிகள் வைக்கும் ஸ்டேட்டஸ்களுக்கு முறையற்ற பதில்கள் அனுப்புவது, கையைப் பிடிப்பது, தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் DSO அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 75 (1) BNS., பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், வால்பாறை சரக DSP ஸ்ரீநிதி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தற்காலிக பேராசிரியர்களான சதீஸ்குமார், முரளி ராஜ், லேப் டெக்னீசியன் அன்பரசு ஆகிய மூவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த தற்காலிக பேராசிரியர் ராஜ பாண்டியையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம், சமீபத்தில் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகிறது. தொடர்ந்து மருத்துவமனைகள், விடுதிகள், கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவது கவலையளிக்கிறது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...