கோவையில் 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கண்காட்சியை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து கண்காட்சி இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வாழைத் தண்டு மற்றும் வாழைப்பூவால் உருவாக்கப்பட்ட குத்துவிளக்கை ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர், செயல்முறை விளக்கங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவரது தலைமையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.



மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேசுகையில், "கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில், கர்ப்ப காலம் தொடங்கி குழந்தை பிறந்து இரண்டு வயது ஆகும் வரை உள்ள 1000 நாட்களின் முக்கியத்துவம் குறித்தும், இந்த நாட்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்க படங்களுடன் கூடிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், தடுப்பூசி அட்டவணை, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகள், செயல்முறை விளக்கங்கள், குழந்தைகள் முன் பருவக் கல்வி ஆகியவற்றிற்கான விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...