கோவை வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி: செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.590. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) காளான் வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 2024 மாதத்திற்கான பயிற்சி, 05.09.2024 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமாக ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) (வரி கட்டணம் உட்பட) நேரிடையாக செலுத்த வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 0422-6611336, 0422-6611226. மின்னஞ்சல் முகவரி: [email protected].

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...