கோவையில் அனுமதியின்றி இயங்கும் லாட்ஜ் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு: மேயர் மீது அரசியல் குற்றச்சாட்டு

கோவை ராமலட்சுமி நகரில் அனுமதியின்றி இயங்கும் ஐஸ்வர்யா லாட்ஜ் மீது நடவடிக்கை கோரி பாஜக மனு அளித்துள்ளது. மேயர் மீது அரசியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை ராமலட்சுமி நகரில் இயங்கி வரும் ஐஸ்வர்யா லாட்ஜ் அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், அங்கு சில சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறி அந்த லாட்ஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தொழில் பிரிவு மாநில துணைத்தலைவர் செல்வகுமார் ஊர் பொதுமக்கள் சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய செல்வகுமார், கோவை கோல்ட் விங்ஸ் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருப்பதாகவும், இந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஐஸ்வர்யா லாட்ஜ் மாநகராட்சியிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அந்த லாட்ஜில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.



மேலும், அந்த லாட்ஜின் உரிமையாளர் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் லாட்ஜின் வாகன வசதிக்காக இந்த கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இதற்கு முன்பிருந்த கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இந்த கோவிலை இடிக்க முயற்சி செய்ததாகவும் கூறினார். தற்பொழுது உள்ள புதிய மேயரும் கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இவ்விவகாரத்தில் பாஜக பொதுமக்களை திரட்டி போராடும் எனவும் கூறினார்.

அந்த லாட்ஜ் குறித்து ஆர்டிஐ செய்து பார்த்த பொழுது அனுமதி அளித்ததற்கான ஆவணங்கள் மாநகராட்சியிடம் இல்லை என்று பதில் தரப்பட்டதாக குறிப்பிட்டார். அந்த லாட்ஜை விற்றுக் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்ற காரணத்திற்காக புதிய மேயர் கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது குறித்து அளிக்கப்பட்ட மனுவில் லாட்ஜ் இருப்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவிர அப்பகுதியில் கோவில் இருப்பதையோ மேயரின் தலையீட்டையோ கோவிலை இடிக்க முயற்சிப்பதையோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...