கோவை உப்பிலிபாளையத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம்: இன்ஜினியர் தற்கொலை

கோவை உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்த 31 வயது இன்ஜினியர் மணிகண்டன், பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.


கோவை: கோவை உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்த இன்ஜினியர் ஒருவர், பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கருவலூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் மணிகண்டன் (31), இன்ஜினியரிங் பட்டதாரி. திருமணமாகாத மணிகண்டன், கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மணிகண்டன் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். செப்டம்பர் 1 ஆம் தேதி கோவைக்கு விரைந்து வந்த பெற்றோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அறையைத் திறந்து பார்த்தபோது, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, கோவை ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மணிகண்டன் பங்குச்சந்தை முதலீட்டில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் உப்பிலிபாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...