கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு; இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முயன்றதாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் துறை செப்டம்பர் 2 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கோவை மாநகரிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநில தலைநகரங்களுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்லும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.

செப்டம்பர் 1, 2024 அன்று மாலை முதல் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கோவையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் 95 ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஆம்னி பேருந்தை இயக்க முயன்றது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று ஓட்டுநர்களை ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நாள் இரவு, கோவை மாநகர போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை மாநகரில் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 5 உயர்தர கார்கள், 4 உயர்தர இருசக்கர வாகனங்கள் உட்பட குடிபோதையில் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காக மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...