ஏப்.30 அன்று இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்


கடந்த 2017 ஏப்ரல் 2ம் தேதியன்று நடைபெற்ற முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 3.29 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது, வரும் ஏப்ரல் 30-ம் தேதியன்று (ஞாயிறு) இரண்டாம் தவணை சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1182 மையங்களும், நகர்புறங்களில் 399 மையங்களும் என 1581 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட 3.3 லட்சம் குழந்தைகள் பயன்பெறவுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 1629 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க 34 மையங்கள் மற்றும் 24 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இம்முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டு முகாமில் வழங்க தயார் நிலையில் உள்ளது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத் துறை அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6536 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே பாலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான ஏப்ரல் 30ம் தேதியன்று தவறாமல் போலியோ சொட்ட மருந்து அளிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...