கோவையில் வேளாண்துறை அமைச்சர் தலைமையில் மூன்று மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பயனாளிகளுக்கு மானிய உதவி வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப். 03) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது பயனாளிகளுக்கு மானிய உதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.



அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், பொள்ளாச்சியில் தென்னை வாடல் நோய் குறித்து விவசாயிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளும் மாணவர்களும் இந்நோய் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். சுமார் 22 கோடி மதிப்பீட்டில் தென்னை வாடல் நோய் தடுப்பு மருந்துகளும் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யானைகள் வழித்தடத்தில் உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணை எடுக்கப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்நடவடிக்கை நீதிமன்றத்தால் எடுக்கப்பட்டதாகவும், தமிழக அரசு இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். கொப்பரை தேங்காய் கொள்முதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு நெல் ஊக்கத்தொகையாக 985 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட 13 லட்சம் விவசாயிகளுக்கு 945 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கவும், நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...