நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சர்வீஸ் கோட்டா வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற உத்தரவு படி தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பிற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதி்ர்ப்பு தெரிவித்தும் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள, பேராசிரியர்கள் ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதில், நேற்று கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



இந்நிலையில், மருத்துவர்களுக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். சர்வீஸ் கோட்டா வேண்டும் எனக் கூறி மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...