கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 15,000 வேலை வாய்ப்புகள்

கோவையில் செப்டம்பர் 21-ஆம் தேதி தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 15,000 வேலை வாய்ப்புகள் உள்ளன.


கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாம் ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் நடைபெறும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இவை உற்பத்தி, ஜவுளி, பொறியியல், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவை. இந்த நிறுவனங்கள் மொத்தமாக 15,000 வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பள்ளிக் கல்வி முடித்தவர்கள், இளநிலை, முதுகலை பட்டதாரிகள், டிப்ளமோ பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பங்கேற்க வயது வரம்பு இல்லை என்றும், முன்பதிவு கட்டணம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது சுயவிவரம் (Bio-Data) மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு முகாமிலேயே நியமன ஆணை வழங்கப்படும்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து மேலும் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். வேலை தேடுபவர்கள் 0422-2642388 அல்லது 9499055937 என்ற எண்களிலும், வேலையளிப்போர் 9790199681 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...