கோவை கொடிசியாவில் 'ராமேட் இந்தியா 2024' பேப்பர் மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி: செப்டம்பர் 10 முதல் 12 வரை

கோவை கொடிசியாவில் செப்டம்பர் 10 முதல் 12 வரை நடைபெறும் 'ராமேட் இந்தியா 2024' கண்காட்சியில் பேப்பர் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும். 150 கோடி ரூபாய் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் 10 முதல் 12 வரை "3P Expo"வின் ராமேட் இந்தியா 2024 கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான இந்த கண்காட்சியில், பேப்பர் மற்றும் பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான காட்சிப்படுத்தல்கள் இடம்பெறும்.

இந்த கண்காட்சியின் போஸ்டர் வெளியீட்டு விழா கோவை கொடிசியா அரங்கில் செப்டம்பர் 4 அன்று நடைபெற்றது. இதில் "3P Expo" தலைவர் ஜெகதீசன், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் சிறப்பம்சங்களாக, லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் துறை சார்ந்த அரங்குகள், 55 காட்சி அரங்குகள், 20க்கும் மேற்பட்ட நேரடி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு ஆகியவை இடம்பெறும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கண்காட்சியின் மூலம் 150 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கோவா, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பார்வையாளர்கள் அனைவருக்கும் நுழைவு இலவசம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...