கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 44-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 44-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் 9,526 மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 09, 2024 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆர்.என்.ரவி தலைமையேற்கிறார். நலத்துறை அமைச்சரும், தமிழ்நாடு வேளாண்மை-உழவர் இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறநல்கை பரிசுகளையும், பதக்கங்களையும் அறிவிக்கவுள்ளார்.

முனைவர் திரிலோச்சன் மஹாபத்ரா, தலைவர், பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய அரசு, புதுதில்லி மற்றும் முன்னாள் தலைமை இயக்குநர், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், புதுதில்லி அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றவுள்ளார்.

இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற உள்ளனர். இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும் (In person), உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் (In absentia) மூலமாகவும் பட்டங்களைப் பெற உள்ளார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...