கோவையில் வழக்கை வாபஸ் பெற கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல்: மூவர் மீது புகார்

கோவை கவுண்டம்பாளையத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற கோரி ஒரு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சமீபத்தில் இறந்தார். இவரது மனைவி கனக லட்சுமி (46) தனது இளைய மகள் மீது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கோரி முருகனின் மனைவி பானுப்பிரியா, அவரது தாயார் சின்னம்மாள், மற்றும் தங்கை பழனியம்மாள் ஆகியோர் கனக லட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து கனக லட்சுமி, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 4 அன்று புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பானுப்பிரியா, சின்னம்மாள், பழனியம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...