கோவையில் 11, 12 தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

கோவையில் வரும் 11, 12 தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் கூட்டமைப்பு ஆலோசனை, மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா மற்றும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.


கோவை: கோவையில் வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

11ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக அரங்கில் பல்வேறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார்.

12ஆம் தேதி காலை 10:00 மணியளவில் ஹிந்துஸ்தான் கல்லூரி அரங்கில் மத்திய மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் மத்திய நிதி அமைச்சர், 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்குகிறார்.

அதே நாள் மாலையில் பா.ஜ.க கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு காளப்பட்டி கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 25,000 புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைய உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...