தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 செலுத்தி பங்கேற்கலாம்.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி வரும் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெறும்.

இந்த பயிற்சியில் மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய் மற்றும் வெங்காய ஊறுகாய் ஆகியவற்றை தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். பயிற்சி நடைபெறும் இடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை, கோயம்புத்தூர் - 641003. பேருந்து நிறுத்தம் வாயில் எண்.7 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்- 94885 18268, மின்னஞ்சல்[email protected].

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...