தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்: நடிகர் விஜய் அறிக்கை

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதாக நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு அரசியலை அணுகுவதாகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காக இதுவரை காத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்ததாகவும், அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பங்குபெற அனுமதி வழங்கியுள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

"தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!" என்று விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...