அமெரிக்காவில் ரூ.4000 கோடி முதலீடு ஈர்த்த முதல்வர் - அமைச்சர் முத்துசாமி பெருமிதம்

கோவையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.96.47 கோடி கடன் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் முத்துசாமி பேசினார். முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்தும், மகளிர் குழுக்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர் விளக்கினார்.



கோவை: கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.



இந்நிகழ்வில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள 1,727 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.96.47 கோடி கடன்களை வழங்கினார்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, "கோவை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.96.47 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஒருங்கிணைத்து பணியாற்றிய ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், "மகளிர் சுயஉதவிக் குழு கலைஞர் கொண்டு வந்த மகத்தான திட்டம். தற்போதைய முதல்வர் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சுயஉதவிக் குழுக்களை பொருத்தவரை முதல்வர் தனி கவனம் செலுத்துகிறார்," என்று குறிப்பிட்டார்.

முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்தும் அமைச்சர் பேசினார். "அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் இதுவரை 11 நிறுவனங்களுடன் தமிழகத்தில் முதலீடு செய்ய ரூ.4,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடியான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும், "வெளிமாநிலங்களில் இருந்து பார்ப்போருக்கு நமது திட்டங்கள் பெரிய திட்டங்களாக தெரிகிறது," என்று அமைச்சர் முத்துசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...