அன்னூரில் அவிநாசி அத்திகடவு திட்டக் குழாய் உடைப்பு: வீணாகும் தண்ணீர்

அன்னூர் அருகே அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார். விவசாயிகள் தரமான குழாய்கள் அமைக்க கோரிக்கை.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

அல்லிக்குளம் ஊராட்சியில் உள்ள அல்லி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் அண்மையில் அவிநாசி அத்திகடவு திட்டம் மூலம் தண்ணீர் நிரப்ப குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

திட்டம் நிறைவேற்றப்பட்டு குளத்திற்கு தண்ணீர் வர தொடங்கி ஒரு மாதத்திற்குள் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தண்ணீர் சாலைகளிலும் வீணாக செல்கிறது. தரமான குழாய்கள் பதிலாக சாதாரண குழாய்கள் அமைக்கப்பட்டதால் அவ்வப்போது இந்த திட்டத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

நீண்ட நாட்களாக எப்போது தண்ணீர் வரும் என காத்திருந்த நிலையில், தற்போது வரும் தண்ணீரும் வீணாவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தரமற்ற முறையில் உள்ள குழாய்களை மாற்றி தண்ணீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போது அல்லி குளம் பகுதியில் குழாய் உடைப்பின் வீடியோ காட்சிகள் அந்த கிராம மக்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகார்களை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...