டிசம்பர் 31, 2024-க்குள் 2000-க்கு முந்தைய பிறப்புகளை பதிவு செய்ய வேண்டுகோள் - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் 2000-க்கு முந்தைய பிறப்புகளை டிசம்பர் 31, 2024-க்குள் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு பெயர் பதிவு செய்ய இயலாது என எச்சரித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, 2000-ஆம் ஆண்டிற்கு முந்தைய பிறப்புகளை பதிவு செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவுச்சட்டம் 2000-ன் விதிகளின்படி, 2000-ம் ஆண்டிற்கு முந்தைய பிறப்புகளை டிசம்பர் 31, 2024-க்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு 2000-க்கு முந்தைய பிறப்புகளை நிரந்தரமாக பதிவு செய்ய இயலாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநில அரசால் 25 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இனி மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளின் பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். 2017-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்த இடம் சார்ந்த வார்டு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது, குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஒரு ஆவணம் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் / நற்சான்றிதழ் போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பெயர் பதிவு கால தாமத விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

நடப்பாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தையின் பெயரை கால தாமத பதிவுக் கட்டணமின்றி பதிவு செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய அறிவிப்பை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS வெளியிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...