கோவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற முன்னாள் டிரைவர்

கோவையில், சுஸ்லான் நிறுவனத்தின் முன்னாள் டிரைவர் நாகராஜ், 2018-ல் ஏற்பட்ட விபத்தில் கால் இழந்தார். இழப்பீடு கிடைக்காததால், கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு முன்னாள் டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகராஜ் என்ற இந்த நபர், முன்னதாக சுஸ்லான் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு, பணியின் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் கிரானைட் கல் அவரது கால் மீது விழுந்ததால், வலது கால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, அவரது வலது காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நிறுவன நிர்வாகம் தரப்பில் இருந்து எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த பலனும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஆதங்கம் அடைந்த நாகராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



உடனடியாக செயல்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள், நாகராஜை தடுத்து நிறுத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது குறைகளை கேட்டறிந்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...