கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்: மாவட்ட ஆட்சியர் உறுதி

கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்துள்ளார். சமத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்துள்ளார்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.



இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை, வேளாண்துறை, இலவச வீட்டு மனை பட்டா, கூட்டுறவு கடன் சங்கம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 275 பயனாளிகளுக்கு ரூ.89 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, "கோவை மாவட்டத்தில் வேர் வாடல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு தமிழக முதல்வர் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதில் 13 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...