மாநகராட்சியின் தூய்மை விளம்பர பலகை மட்டும் இங்கே? வேலை பணிகள் எங்கே?


கோவை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற 'ஸ்வச் சர்வேக்சன் 2017' கோவை முதலிடம் பெறுவதற்கு கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. 


ஸ்மார்ட் சிட்டி குறித்து மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை மட்டும் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதால் வழக்கம்போல் கோவை மாநகரம் பழைய நிலைக்கு மாறியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.





கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பை மற்றும் சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீரினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போத்தனூர் ரயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலையில் சாக்கடை நீர் வழிந்த்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் தினத்தோறும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.




அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது. இதில் பத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கும் இந்த நிலைமை மாறுவதற்கும் மாநகராட்சி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள். 







Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...