கோவையில் 15 லட்சம் பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவையில் 'சுயம்' திட்டத்தின் கீழ் 1500 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினார்.



Coimbatore: கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற 'சுயம்' திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்வில், 1500 ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது உரையில், சுயம் திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளதாகவும், விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.



மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் மூலம் பெண்களின் வாழ்க்கை மேம்பட்டு வருவதாக குறிப்பிட்டார். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் நாடு முழுவதும் 53 கோடி கணக்குகளில் 29.6 கோடி கணக்குகள் பெண்களுக்கு சொந்தமானவை என்றும், தமிழகத்தில் மட்டும் 94 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

கோவையைப் பொறுத்தவரை, 5 லட்சம் பெண்கள் ஜன் தன் கணக்கு வைத்துள்ளனர் என்றும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவில் 7 லட்சம் பெண்களும் பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.



மேலும், அடல் பென்ஷன் யோஜனாவில் கோவையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்துள்ளதாகவும், முக்கியமாக, கோவையில் 15 லட்சம் பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 311 பெண்களுக்கான ITI மையங்கள் இருப்பதாகவும், கோவை கவுண்டம்பாளையத்தில் ஒரு பெண்கள் ITI மையம் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டி வாழ்வாதாரம் பெறும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...