சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிபிஐ(எம்) பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த சீதாராம் யெச்சூரி, மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பை வகித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு மாதகாலமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, "சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று குறிப்பிட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நண்பர் சீதாராம் யெச்சூரி, நம் நாட்டைப் பற்றி ஆழமான புரிதல் கொண்டவர் மற்றும் இந்தியா என்ற சிந்தனையின் பாதுகாவலர்" என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தியை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக அவரைத் தெரியும். அவரின் மறைவு தேசிய அரசியலுக்கு பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய இடதுசாரி அரசியலுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...