இந்தியாவில் முதன்முறையாக ராயல் கேர் மருத்துவமனையில் "பிரான்கியல் தெர்மோபிளாஸ்ட்டி" ஆஸ்துமா சிகிச்சை

தமிழகத்தில் பஞ்சாலை தொழில் நகரமாக விளங்கும் கோவை மாநகரத்தில் ஆஸ்துமா நோயினால் ஏராளமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை இந்த மூச்சுக்குழாய் பாதிப்புக்கு இன்ஹேலர் மூலம் உறிஞ்சப்படும் மருந்துகளை கொண்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில சமயங்களில் நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து நெபுலைசர், ஸ்டெராய்டு மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டன. 

நுரையீரலின் தசைகள் 50 சதவிகிதத்திற்கு மேல் சுருங்கும் பொழுது மூச்சு இளைப்பு நோயாக மாறுகிறது. தற்பொழுது அதிநவீன நுரையீரல் சிகிச்சை முறையான "பிரான்கியல் தெர்மோபிளாஸ்ட்டி" என்ற சிகிச்சை முறையானது இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் அமைந்துள்ள ராயல் கேர் உயர்சிகிச்சை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன சிகிச்சை முறையில் குறைந்த அளவே மயக்க மருந்து செலுத்தப்படும். ஒரு சிறிய குழாய் மூச்சு குழாயில் செலுத்தப்பட்டு அதன் மூலமாக கதீட்டர் செலுத்தப்பட்டு வெப்ப நீக்கம் என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வெப்ப நீக்கத்தின் மூலம் வீக்கம் அடைந்துள்ள நுரையீரலின் தசைப்பகுதிகள் சரிசெய்யப்படுகிறது. இந்த நுரையீரல் இடையீட்டு சிகிச்சை மூலம் ஆஸ்துமா நோய் பாதிப்பு, அவசர சிகிச்சை மற்றும் மருந்துகளின் தேவைகளை வெகுவாக குறைக்கப்படுகிறது. 

இந்த நவீன சிகிச்சை முறையை ராயல் கேர் உயர்சிறப்பு மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை துறையின் மருத்துவ நிபுணர்களான மருத்துவர்கள் பட்டாபிராமன், மஹாதேவன் மற்றும் அர்ஜூன் ஸ்ரீனிவாசன் ஆகியோரால் திறம்பட மேற்கொள்ளப்படுகிறது.



இதுகுறித்து ராயல் கேர் மருத்துவமனையின் சேர்மன் மருத்துவர் கே.மாதேஸ்வரன் கூறுகையில், இந்த அதிநவின இடையீட்டு நுரையீரல் சிகிச்சை முறையானது எங்களது மருத்துவமனையில் கையாளப்படும் உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சை முறைகளுடன் இணைந்து மேலும் சிறப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு மிகச்சிறப்பான எளிமையான வைத்திய முறையில் நிவாரணம் பெற வழிவகை செய்கிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...