கோவை மாநகரத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த மே 1 முதல் தடை- மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 2016 18.03.2016 -ம் தேதிய அறிவிப்பின் படி மாநகராட்சியின் சுற்றுபுறசூழலைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் அழகினை பராமரிக்கவும், பாதுகாக்கவும், 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது என மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தினார்.



மேலும், இத்தடை உத்தரவினை மீறி மாநகராட்சியின் எல்லைக்குள் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள், பிளாஸ்டிக் சீட்டுகள் முதலியவற்றை உற்பத்தி செய்பவர்களும் அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...