பொள்ளாச்சியில் தபால் குறைகேட்பு கூட்டம் செப்டம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

பொள்ளாச்சியில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவிருந்த தபால் குறைகேட்பு கூட்டம், பொதுவிடுமுறை காரணமாக செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தபால் கோட்டக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் தபால்துறை சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவும் அவ்வப்போது நடத்தப்படும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கோட்ட அளவில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 11:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பொதுவிடுமுறை காரணமாக இந்தக் கூட்டம் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி தபால் கோட்டக் கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் செப்டம்பர் 13 அன்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை எடுத்துரைக்கலாம். மேலும், தபால் சேவைகளை மேம்படுத்துவதற்கான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...