கோவை சிங்கை மண்டல் தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்: பாஜக மாவட்ட தலைவர் அறிவிப்பு

கோவை சிங்கை மண்டல் தலைவர் R.சதீஷ் கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் ஜே ரமேஷ் குமார் இன்று (செப்டம்பர் 14) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டல் தலைவராக செயல்பட்டு வந்த R.சதீஷ் அவர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவு மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் A.P.முருகானந்தம் மற்றும் மாநில பொருளாளர் S.R.சேகர் ஆகியோரின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டுள்ளதாக ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

R.சதீஷ் அவர்கள் கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...