கொங்கு மண்டலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மன்னிக்காது - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தின் தொழில்கள் நசிந்து வருவதை முதலமைச்சர் கவனிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஜி.எஸ்.டி. குறித்த தொழில்முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று" என்று கூறியதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து அதைக் காப்பாற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்ததாகவும், ஆனால் அவரது முயற்சிகளுக்கு திமுக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை என்றும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்துவரி, பதிவு கட்டண உயர்வு காரணமாக 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சருடன் தொழில்முனைவோர்கள் நேரடியாக சந்திக்கும் கூட்டத்திற்கு தாம் ஏற்பாடு செய்ததாகவும், அந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என்றும், கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் மன்னிக்காது என்றும் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...