கோவை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு திமுக கழக விருதுக்கு தேர்வு

கோவை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு திமுக கழக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதை வழங்குகிறார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி தலைவரும் நகர கழக செயலாளருமான அறிவரசு, இந்த ஆண்டிற்கான திமுக கழக விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைமை கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைபடி கழக விருது வழங்கப்படுகிறது. அதன்படி முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் நகர கழக செயலாளர் அ.அறிவரசு பணியில் சிறப்பாக பணியாற்றியமைக்காக திமுக தலைவரின் நேரடி பார்வையில் இந்த விருதுக்கு அறிவரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வரும் மே 17ஆம் தேதி மாலை சென்னை நந்தனம் YMCA திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதை கூடலூர் நகர செயலாளர் அறிவரசுக்கு வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...