கோவை தொழில் அமைப்புகள் நிதி அமைச்சருக்கு நன்றி: வானதி சீனிவாசன் கருத்து

கோவையைச் சேர்ந்த 11 தொழில் அமைப்புகள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துள்ளன. இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையைச் சேர்ந்த 11 தொழில் அமைப்புகள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், "GST சம்பந்தமான தொழில் அமைப்புகள் சந்திப்பு வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி இன்று மக்களை திசை திருப்ப ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு பாஜக கட்சி மற்றும் பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருப்பார்கள். இந்த போலி போராட்டங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக எப்போதும் பாஜகவினர் உறுதுணையாக இருப்போம்" என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முடிவில், "நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்த தொழில் அமைப்புகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...