கோவை சரவணம்பட்டி பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சரவணம்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி கழகத்தின் 3, 4, 10, 11, 12, 21 ஆகிய வட்டக் கழகங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு கோவை எம்பி கணபதி ராஜ்குமார் நேற்று (செப்டம்பர் 14) நன்றி தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி, பகுதி கழக செயலாளர் சிரவை சிவா (எ) பழனிசாமி, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிக் கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், இந்தியா கூட்டணிக் கட்சி நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.





எம்பி கணபதி ராஜ்குமார் தனது உரையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், பொறுப்பையும் அளித்துள்ளது. தொடர்ந்து உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...