இந்திய இராணுவ வீரர்களைக் கொன்ற பாகிஸ்தானைக் கண்டித்து அந்நாட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

பாகிஸ்தான் இராணுவத்தால் இராணுவ வீரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பாகிஸ்தான் நாட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இறந்த இராணுவ வீரர்களான நயிப் சுபேதர் பரம் ஜித் சிங் மற்றும் பிரேம் சாகர் ஆகிய இருவரின் உடல்கள் சிதைக்கபட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் இந்த கொடூர செயலிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் பாகிஸ்தான் கொடி எரிப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியினை கீழே வீசி காலில் மிதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அந்தக் கொடியினை எரிக்கவும் அவர்கள் முயன்றனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...